நச்சு ரசாயன தாக்குதல்; சந்தேக நபர் 'ரஷ்ய ராணுவ உயரதிகாரி'

நச்சு ரசாயன தாக்குதல்; சந்தேக நபர் 'ரஷ்ய ராணுவ உயரதிகாரி'

1 mins read
Google News Preferred Icon

லண்டன்: செலிஸ்பரி நச்சு ரசாயன தாக்குதலின் தொடர்பில் பிரிட்டன் தற்போது தேடுகிற இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் ரஷ்யாவைச் சேர்ந்த 'கர்னல்' எனத் தெரிய வந்துள்ளது. இம்மாதத்தின் தொடக்கத்தில், ரஷ்யாவைச் சேர்ந்த இருவர் மீது பிரிட்டனில் கொலை முயற்சிக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. முன்னைய ரஷ்ய உளவாளி சர்கி ஸ்க்ரிபலையும் அவருடைய மகளையும் 'நொவிச்சொக்' ரசாயனத்தைப் பயன்படுத்தி அவர்களைக் கொலை செய்ய இவ்விருவரும் முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். ஆயினும் இந்தச் சம்பவத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ரஷ்யா கூறி வருகிறது.