ஈரான்: அமெரிக்கா ஐ.நாவில் எதையும் சாதிக்கவில்லை

ஈரான்: அமெரிக்கா ஐ.நாவில் எதையும் சாதிக்கவில்லை

1 mins read

ஜெனீவா: ஐக்கிய நாட்டுப் பொதுக்கூட்டத்தில் அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை என்று ஈரானிய அதிபர் ஹசான் ருஹானி தெரிவித்தார். பொதுக்கூட்டத்தில் இரு தலைவர்கள் தத்தம் உரைகளில் ஒருவரையொருவர் சாடினர். அமெரிக்கா தனிமைப்படுத்தப் பட்டுள்ளதை இந்தக் கூட்டம் காட்டியதாக திரு ருஹானி, ஈரானில் நேற்று நேரடியாக ஒளி பரப்பப்பட்ட தனது தொலைக் காட்சி உரையில் தெரிவித்தார். "திரு டிரம்ப், தனது ஈராண்டு நிர்வாகத்தில் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டி ருந்தபோது அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்," என்று திரு ருஹானி கூறினார்.

"அமெரிக்காவை ஓரிரு நாடு களைத் தவிர, வேறு எந்த நாடும் ஆதரிக்கவில்லை. வரலாற்றில் அமெரிக்கா இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டது அரிது," என்றும் அவர் கூறினார். அமெரிக்காவைப் பற்றி ஈரான் என்ன நினைக்கிறது என்பதைத் தாம் பொருட்டாகக் கொள்ள வில்லை என்று திரு டிரம்ப், ஐக்கிய நாட்டுப் பொதுக்கூட்டத்தில் நேற்று முன்தினம் தெரிவத்தார். "ஈரான் மீண்டும் என்னிடம் வந்து ஒப்பந்தம் செய்யக் கேட்கப்போகிறது," என்று அவர் கூறினார். அமெரிக்காவுக்கு முதன்மை அளிக்கும் கொள்கையையும் திரு டிரம்ப் தமது பேச்சில் வலி யுறுத்தினார்.