போர்ட்டிக்சன் இடைத்தேர்தலை நிறுத்த முயற்சி

போர்ட்டிக்சன் இடைத்தேர்தலை நிறுத்த முயற்சி

1 mins read
Google News Preferred Icon

கோலாலம்பூர்: போர்ட்டிக்சன் நகரின் நாடாளுமன்ற இடைத்தேர்தலை நிறுத்த வாக்காளர் ஒருவர் நீதிமன்ற மறுஆய்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார். போர்ட்டிக்சனின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்யால் பாலகோபால் அப்துல்லா தனது பதவியிலிருந்து விலகி, இடைத்தேர்தலுக்கு வலுக்கட்டாயமாக ஏற்பாடு செய்தது அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்று அவர் தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலிசாரிடம் புகார் செய்ததாக அவர் கூறினார்.