கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத் திலிருந்து பயணிகள் வெளியேறும் பகுதியில் பணிபுரியும் ஆறு குடிநுழைவு அதிகாரிகளை மலேசிய ஊழல் ஒழிப்புக் குழுவின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். ஊழல், பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச் சாட்டுகளின்பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று நடத்தப்பட்ட 'ஆப்ஸ் சைலன்ட்' எனப் பெயரிடப்பட்ட அந்த அதிரடி நடவடிக்கையின்போது கைதான குடிநுழைவு அதிகாரிகளுடன் பங்குதாரராக இணைந்து செயல் பட்ட முகவர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டார்.
நேற்று கைதான சந்தேக நபர்கள் அனைவரும் மனிதக் கடத்தலில் ஈடுபடும் 15 கும்பல் களுக்கு உதவியதாகக் கூறப் பட்டது. தடைசெய்யப்பட்ட பட்டியலில் இருக்கும் உள்ளூர்வாசிகள், வெளிநாட்டவர் உள்ளிட்ட முக்கிய மான குற்றவாளிகள் மலேசியாவின் அனைத்துலக விமான நிலையம் மற்றும் நாட்டின் இதர அனைத் துலக விமான நிலையங்கள் வழி யாக நாட்டுக்குள் சென்று வரு வதற்கு அந்த அதிகாரிகள் உதவி செய்ததாகச் சொல்லப்பட்டது.
போலியான ஆவணங்கள், பின்னணிகள் ஆகியவற்றைக் கொண்ட சுமார் 200 பேர் இந்த கும்பல்களால் மலேசியாவுக்குள் மாதந்தோறும் கடத்திச் செல்லப் பட்டதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன.
இந்த நடவடிக்கையில் உதவிய தற்காக ஊழல் அதிகாரிகளுக்கு பெருந்தொகையை இந்த ஆள் கடத்தல் கும்பல்கள் ரொக்கமாக வழங்கியதாகவும் முகவர்கள், இடைத்தரகர்கள் ஆகியோருடன் சேர்ந்து அதிகாரிகளும் அந்தத் தொகையைப் பங்கிட்டுக்கொண்ட தாகவும் 'தி ஸ்டார்' நேற்று வெளியிட்ட செய்தியில் குறிப் பிடப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஊழல் ஒழிப்பு அதிகாரிகள், குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகளை அவர்களது ஆடம்பரமான வாழ்க்கைமுறையின் அடிப்படையில் கண்டுபிடித்தனர்.

