'நஜிப் விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட பணத்தை போலிஸ் திருடவில்லை'

'நஜிப் விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட பணத்தை போலிஸ் திருடவில்லை'

1 mins read

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் தொடர்பில் மே மாதம் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட 43.3 மில்லியன் ரிங்கிட்டை (S$14.3 மி.) மலேசிய போலிஸ் திருடியதாக வலைப்பதிவாளர் ராஜா பெட்ரா கமருடினின் கூற்றை வணிகக் குற்றவியல் தலைமை அதிகாரி அமர் சிங் மறுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறும் வலைப் பதிவாளர் ராஜா பெட்ராவின் இக்குற்றச்சாட்டு வேடிக்கையாக இருப்பதாக அவர் கூறினார். ராஜா பெட்ரா புலனாய்வுச் செய்தியாளர் அல்ல என்றும் வெறும் கூலிக்காக வேலை செய்யும் எழுத்தாளர் என்றும் திரு அமர் தொடர்ந்து கூறினார். ராஜா பெட்ராவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அதற்கான நம்பகமான தகவல் இருந்தால் போலிசாரிடம் தைரியமாகப் புகார் அளிக்க வேண்டும் என்று நேற்று தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு அமர் பேசினார். போலிஸ் பணத்தைத் திருடியதைப் பற்றி புகார் அளிக்க ராஜா பெட்ரா முன்வருமாறு கூறியதுடன் அது பொய் என நிரூபிக்கப்பட்டால் அதற்கான சட்டபூர்வமான விளைவுகளைச் சந்தித்தாக வேண்டும் என்றும் திரு அமர் எச்சரித்தார்.