இந்தோனீசியாவில் நிலநடுக்கம், சுனாமி

1 mins read

மக்காசார்: சுலாவெசி தீவின் மையப்பகுதியை 7.5 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்கம் நேற்று உலுக்கியதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந் ததாக இந்தோனீசியாவின் தேசிய பேரிடர் அமைப்பு தெரிவித்தது. பதற்றத்தில் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறிய தாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்பில் தேடி மீட்கும் பணிக்குழுக்கள் பாதிக் கப்பட்ட இடங்களுக்கு அனுப் பப்பட்டுள்ளதாகவும் அறியப் படுகிறது. சிறியதும் பெரியது மாகப் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

பின்னர் ஏற்பட்ட பலத்த 7.5 ரிக்டர் நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டது. இரண்டு மீட்டர் உயரத் திற்கு சுனாமி அலைகள் எழுந்த தாக கூறப்பட்டது. நேற்று இரவு 10 மணிவரை பெறப்பட்ட தகவல் படி ஒருவர் பலியானார். பலி எண்ணிக்கை அதிகரிக் கக்கூடும் என்று கூறப்பட்டது.