பேங்காக்: மக்களாட்சிக்கு வழிவிடும் வகையில் தாய்லாந்து ராணுவத்திற்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிட்டத் தட்ட ஐந்து ஆண்டுகளாக அங்கு ராணுவ ஆட்சி நடந்துவரும் வேளையில் மக்களாட்சிமீது நம்பிக்கைகொண்ட படைத்தலைவர் அபிராட் கோங்ஸே„ம்போங், 58, புதிய ராணுவத் தலைவராகி உள்ளார். மக்களாட்சியைப் பெரிதும் விரும்பக்கூடிய ராணுவப் பிரிவு களில் ஒன்றான அரசரின் காவல் பிரிவைச் சேர்ந்தவர் தளபதி அபிராட் (படம்). தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளிய லாகக் கருதப்படும் தாய்லாந்தின் நிலைத்தன்மையை நிர்ணயிப்பதில் முடியாட்சி, ராணுவம், அரசியல் வாதிகள் ஆகியோருக்கிடையேயான உறவு முக்கியமானது.
தாய்லாந்தில 1991ஆம் ஆண்டு ராணுவ ஆட்சி அகற்றப்பட்டது.
அந்தப் புரட்சியை வழிநடத்திய சுந்தோர்ன் கோங்க்ஸொ„ம்போங் கின் மகன்தான் திரு அபிராட். 22 ஆண்டுகளுக்குப் பிறகு 2014ஆம் ஆண்டில் ராணுவம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய நடவடிக்கையில் திரு அபிராட் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது. தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சாவின் நம்பிக்கைக்கு உரியவராக திரு அபிராட்டை பேங்காக் ஊடகங்கள் சித்திரிக் கின்றன. பொதுத் தேர்தலை அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் நடத்த திரு பிரயுத் ஏற்கெனவே உறுதி அளித்திருந்தார்.

