மான்செஸ்டர்: துணைத் தலைவர் பதவியிலிருந்து பால் போக்பாவை நீக்க முடிவெடுத்துள்ளதால் மான் செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் மூத்த வீரர்கள் சிலர் நிர்வாகி ஜோசே மொரின்யோ மீது கோபமாகவும் விரக்தியிலும் இருப்பதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன.
சொந்த ஓல்ட் டிராஃபார்ட் அரங்கில் விளையாடும்போது மேன்யூ குழுவினர் தாக்குதலில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று அண்மையில் போக்பா கூறி இருந்தார். அவருக்கும் மொரின் யோவிற்கும் ஏழாம் பொருத்தம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், அவரது இக்கருத்து மொரின்யோ விற்கு மேலும் ஆத்திரமூட்டிய தாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, அவர் வசமிருந்த துணைத் தலைவர் பதவியைப் பறிப்பதாகக் கடந்த செவ்வாய்க் கிழமையே மொரின்யோ அவரிடம் கூறிவிட்டதாகத் தகவல்கள் கூறு கின்றன.
இன்றிரவு 7.30 மணிக்குத் தொடங்கவுள்ள இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் ஹேமுடன் மேன்யூ மோதுகிறது.

