இந்தோனீசியாவின் மத்திய சுலவேசி தீவின் தலைநகர் பலு விமான நிலையம் நேற்று வர்த்தக விமானங்களுக்காக மறுபடியும் திறக்கப்பட்டது. அதேவேளையில், நிலநடுக் கம், சுனாமி காரணமாக ஏற் பட்ட பேரிடர் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்க மீட்புப் படையினர் அவசர அவசரமாக படாதபாடுபட்டு வருகிறார்கள். அந்தப் பகுதியில் வெள்ளிக் கிழமை நிகழ்ந்த 7.4 ரிக்டர் நில நடுக்கத்தில் நேற்றிரவு வரை 832 பேர் மாண்டுவிட்டதாக அறிவிக் கப்பட்டது. ஆனால் அந்த எண் ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று எதிர்பார்க் கப்படுவதாக இந்தோனீசிய துணை அதிபர் யூசுஃப் காலா தெரிவித்தார்.
இடிபாடுகள் பலவற்றிலிருந்து கையடக்க தொலைபேசி சமிக்ஞை வருவதாகவும் சிக்கி இருப்போரை மீட்க தாங்கள் முழுமூச்சாக முயன்று வருவ தாகவும் தேசிய தேடி மீட்பு அமைப்பான பசார்னாசின் அதி காரி அகோஸ் குறிப்பிட்டார். பலு பகுதியில் நேற்று வரை யில் 170 தடவை நிலம் அதிர்ந்த தாகவும் தேசிய பேரிடர் சமாளிப்பு அமைப்பான பிஎன்பிபி பேச்சாளர் புருவோ தெரிவித்தார்.
இந்தோனீசியாவின் மத்திய சுலவேசி தீவில் மேற்கு பலு நகரில் சுனாமி தாக்கியதில் கடுமையாக சேதமுற்ற பள்ளிவாசலும் கட்டடங்களும். படம்: இபிஏ

