வாஷிங்டன்: ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விற்பதற்கு வகை செய்யும் உடன்பாடு வெகு விரைவில் காணப்படும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமட் ஜாவட் ஸரீஃப் கூறினார். ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ள நிலையில் ஈரானிய அமைச்சர் ஐரோப்பிய நாடுகளுடன் உடன்பாடு செய்துகொள்வது பற்றி அறிவித்துள்ளார். ஈரானுடன் அனைத்துலக நாடுகள் 2015ஆம் ஆண்டு செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது முதல் அவரின் அந்த முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஈரான் அணுவாயுதங்கள் தயாரிப்பதை தடுப்பதற்கான நல்லதொரு வாய்ப்பை திரு டிரம்ப் தவற விட்டுவிட்டதாக ஐரோப்பிய நாடுகள் கூறுகின்றன.
எண்ணெய் விற்பனை செய்ய ஐரோப்பிய நாடுகளுடன் ஈரான் உடன்பாடு
1 mins read

