ஜப்பானில் கடும் சூறாவளி: 900 விமானச் சேவைகள் ரத்து

ஜப்பானில் கடும் சூறாவளி: 900 விமானச் சேவைகள் ரத்து

1 mins read

தோக்கியோ: ஜப்பானின் தென் மேற்குப் பகுதியை நேற்று 'ட்ராமி' எனும் சூறாவளி தாக்கியதில் கிட்டத்தட்ட 400,000 கட்டடங் களில் மின்தடை ஏற்பட்டதாகவும் 900க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்ட தாகவும் அதிகாரிகள் கூறினர். வீசிய பலத்த காற்றில் 40 பேர் காயம் அடைந்தனர். சூறாவளியின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால் மேற்கு ஜப்பானில் உள்ள கன்சாய் அனைத்துலக விமான நிலையம் அதன் இரு ஓடுபாதைகளை நேற்று காலை 11 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மூடியதாக விமான நிலையத்தின் அறிக்கை தெரிவித்தது.

சூறாவளி நேற்றிரவு மத்திய ஜப்பானை தாக்கக்கூடும் என்றும் தோக்கியோ நகரம் பாதிக்கப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நேற்று காலை ஜப்பானின் தென்பகுதி தீவுகளை தாக்கிய சூறாவளி மணிக்கு 222 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. இதனால் அந்தத் தீவுகளில் உள்ள பல கட்டடங்களுக்கும் 200,000 வீடுகளுக்கும் மின்சார விநி யோகம் துண்டிக்கப்பட்டது.