டிரம்ப்: கடிதப் பரிமாற்றம் மூலம் கிம்முடன் நீடிக்கும் அன்பு

டிரம்ப்: கடிதப் பரிமாற்றம் மூலம் கிம்முடன் நீடிக்கும் அன்பு

1 mins read
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: கடிதப் பரிமாற்றங்கள் மூலமாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் நட்பு நீடிப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெர்ஜீனியாவில் சனிக்கிழமை நடந்த பேரணியில் ஆதரவாளர்களின் முன்னிலையில் பேசிய திரு டிரம்ப், வடகொரியத் தலைவருடன் அன்பார்ந்த நட்பு நீடிப்பதாகக் கூறினார். அன்பான, அழகான கடிதங்களை திரு கிம் எனக்கு அனுப்பியிருப்பதாகவும் அவை அனைத்தும் சிறந்த கடிதங்கள் என்றும் திரு டிரம்ப் குறிப்பிட்டார். கடிதப் பரிமாற்றம் மூலம் தங்களுக்கு இடையில் நட்பார்ந்த அன்பு உருவானதாகவும் அவர் சொன்னார். அவர் அவ்வாறு கூறியதும் அவரது ஆதரவாளர்கள் கரவொலி எழுப்பி அவரைப் பாராட்டினர். திரு டிரம்ப்பும் திரு கிம்மும் சிங்கப்பூரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சந்தித்துப் பேசியபோது கொரிய தீபகற்பத்தை அணுவாயுதமற்ற பகுதியாக உருவாக்க சேர்ந்து பணியாற்ற இணக்கம் கண்டனர்.