அன்வார்: வேறு பிரச்சினைகள் இருந்தால் தேடுங்கள்

அன்வார்: வேறு பிரச்சினைகள் இருந்தால் தேடுங்கள்

1 mins read
0ed4a0b3-430b-4ad1-8fb8-80d45c77ec75
-

போர்ட்டிக்சன்: ஓரினப் புணர்ச்சி நடவடிக்கைகளுடன் தன்னை தொடர்புபடுத்தும் முயற்சிகளை முன்னை மலேசிய துணைப்பிரதமர் டாக்டர் அன்வார் இப்ராஹிம் குறை கூறியுள்ளார். போர்ட்டிக்சனில் வரும் 13ஆம் தேதி நடக்கவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிடும் அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது இது குறித்த தமது கருத்துகளை வெளி படுத்தினார். சிங்கப்பூரில் இந்தோனீசிய மாண வர் ஒருவருடன் திரு அன்வார் ஓரின புணர்ச்சியில் ஈடுபட்டதாக அம் னோவின் உச்சமன்ற தலைவர் லுக்மான் நூர் அடாம் தெரிவித்தார். சிங்கப்பூரின் 'பரித்தா' மீடியாகார்ப் செய்தித்தளம் இந்தத் தகவலை வெ ளியிட்டதாக திரு லுக்மான் கூறினார். ஆனால் இதனை அந்தத் தளம் மறுத்துள்ளது.

இருபது ஆண்டுகளாக இதே விவ காரத்தைப் பற்றி பேசிக் கொண்டி ருக்காமல் வேறு புதிய பிரச்சினைகள் இருந்தால் அவற்றைத் தேடுமாறு திரு அன்வார் செய்தியாளர்களிடம் தெரி வித்தார். போர்ட்டிக்சன் நகரின் குடியிருப்பாளர்களுக்குப் பெரிய விமானத் திட்டம் ஒன்று செயல் படுத்தப்படும் என்றும் திரு அன்வார் தெரிவித்திருக்கிறார். இது குறித்த விவரங்களை அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்போவதாக அவர் கூறினார். படம்: ஏஎப்பி