'ட்ராமி' சூறாவளி; ஜப்பானில் இருவர் மரணம்

'ட்ராமி' சூறாவளி; ஜப்பானில் இருவர் மரணம்

1 mins read
c661144c-34be-43fa-b8b8-4137b1cf9590
-
Google News Preferred Icon

தோக்கியோ: ஜப்பானை 'ட்ராமி' சூறாவளி உலுக் கியதில் குறைந்தது இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தோக் கியோவில் காலை நேர பய ணங்கள் சூறாவளியால் பாதிக்கப்பட்டன. நேற்று காலையில் சூறாவளி ஜப்பானை விட்டு அகன்ற போதும், பலத்தக் காற்று, கனமழை ஆகியவற்றால் சாலைகளும் ரயில் தண்ட வாளங்களும் அடைக்கப் பட்டிருந்தன. உயிரிழந்த இருவரில் ஒருவர், ஜப்பானின் மேற்குப் பகுதியிலுள்ள டெட்டோரி மாநிலத்தில் , நிலச்சரிவில் சிக்கியதாக அதிகாரிகள் தெரி வித்தனர். மற்றொ ருவர், ஜப்பானிய தலைநகர் தோக்கியோவுக்கு அருகி லுள்ள யாமனா‌ஷி பகுதி யில் பேரலையால் மாண் டார். இருவரும் நேற்று முன்தினம் மாண்டதாக நம்பப் படுகிறது.

ட்ராமி சூறாவளியின் தாக்கத்தால் ஜப்பானின் தலைநகர் தோக்கியோவிலுள்ள யொட்சுயா ரயில் நிலையம் சேதமடைந்துள்ளது. படம்: ஏஎஃப்பி