மாலத்தீவின் முன்னாள் அதிபர் விடுதலை

மாலத்தீவின் முன்னைய அதிபர் மவ்மூன் அப்துல் கயூம் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளார். அந்நாட்டின் பொதுத் தேர்தலில் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து திரு மவ்மூன் விடுதலை செய்யப்பட்டார். இதனால், மற்ற அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கைகள் எழுந்துள்ளன. திரு மவ்மூனும், 80, அவரது மகன் பாரிஸ் மவ்மூனும் பிணையில் விடுவிக் கப்பட்டனர். இதற்கு திரு மவ்மூனின் மகள் டுன்யா தமது வரவேற்பைத் தெரி வித்ததுடன் மற்ற அரசியல் கைதிகளின் விடுதலையை விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஜனநாயகத் தேர்தலில் முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு மவ்மூனுக்கு 2015ஆம் ஆண்டில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே மாலத்தீவுடனான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த சீனா விரும்புவதாக அந்நாட்டின் அதிபர் சீ சின்பிங் தெரிவித்திருக்கிறார். மாலத்தீவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் முகம்மது சோலிக்கு வாழ்த்து கூறியபோது திரு சீ இவ்வாறு கூறினார்.

திரு சோலி, எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, சீனாவுடன் தொடர்பான தமது நாட்டிலுள்ள கட்டுமான திட்டங் களை மறுஆய்வு செய்யப் போவதாக தெரிவித்தார். இந்தியப் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான கடும் போட்டி சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடைய நிலவுவதாக கவனிப்பாளர்கள் தெரிவித்தனர். சீனாவின் கடல், தரை வெளிப்பாதை திட்டத்தைச் சேர்ந்த முதலீடுகளை ஆராய உள்ளதாக திரு சோலி, பதவியேற்றதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

மாலத்தீவின் முன்னைய அதிபர் திரு மவ்மூனுக்கு 2015ல் 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!