ட்ராமி சூறாவளிக்கு குறைந்தது நால்வர் பலி; இயல்பு நிலைக்குத் திரும்பும் வாழ்க்கை

ட்ராமி சூறாவளிக்கு குறைந்தது நால்வர் பலி; இயல்பு நிலைக்குத் திரும்பும் வாழ்க்கை

1 mins read
320680b7-dfc1-47b9-9f9b-0e9de9651eda
-

தோக்கியோ: ஜப்பானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீசிய ட்ராமி சூறாவளியால் குறைந்தது நால்வர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத் துடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்தச் சூறாவளியால் பல இடங்களில் மின்த டை ஏற்பட்டது. மேலும் ரயில், விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சூறாவளியால் ஏற்பட்ட கடு மையான பாதிப்புகளிலிருந்து அந்நாட்டு மக்கள் மீண்டுவர முற்படுகின்றனர். மின்சாரம், போக்குவ ரத்து போன்ற அடிப்படை வசதிகள் மெதுமெதுவாக சீரான நிலைக்குத் திரும்பி வருகின்றன.

இருப்பினும், தலைநகர் தோக் கியோவின் மத்தியப் பகுதியில் நேற்று காலை உச்சநேரத்தில் மக்கள் வேலைக்குச் செல்ல அரும் பாடுபட்டனர். வேரோடு சாய்ந்து விழுந்த மரங்களையும் இடிபாடுகளையும் அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், ரயில் சேவைகள் வழக்கத்தைவிட தாம தமாகத் தொடங்கின. இதனால் மக்கள் பலரும் நேரத்தோடு வேலைக்குச் செல்ல இயலாமல் அவதியுற்றனர். கடந்த மாதம் தொடக்கத்தில் ஜப்பானில் 25 ஆண்டு களில் இல்லாத கடுமை யான 'ஜெபி' என்கிற புயல் வீசி யதில் குறைந் தது 10 பேர் உயிரிழந் தனர். பல் லாயிரக் கணக் கானோரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.