கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் வசம் இருக்கும் கட்டணம் செலுத்தப்படாத விலையுயர்ந்த நகைகள் தொடர்பிலான சட்ட விவகாரத்தில், தாம் ஆதாரம் அளிக்க வேண்டுமா என்பது குறித்து கூடிய விரைவில் அவருக்கு தெரிய வரும். லெபனானைச் சேர்ந்த குளோபல் ராயல்ட்டி எனும் நகைக் கடை ஒன்று திருமதி ரோஸ்மாவிற்கு அனுப்பிவைத்த 60 மில்லியன் ரிங்கிட் (S$19.9 மில்லியன்) மதிப்பிலான நகைகளுக்கு இழப்பீடு கோரி அவர் மீது வழக்குத் தொடுத்திருந்தது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு திருமதி ரோஸ்மா தாக்கல் செய்திருந்த மனு குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. PHOTO: AFP
ரோஸ்மா மீது நகைக்கடை வழக்கு: உயர் நீதிமன்றம் விரைவில் முடிவெடுக்கும்
1 mins read
-

