'ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட நோபெல் பரிசு மீட்டுக்கொள்ளப்படாது'

'ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட நோபெல் பரிசு மீட்டுக்கொள்ளப்படாது'

1 mins read
005125fb-0fba-4f59-8a7f-c824d001aae2
-
Google News Preferred Icon

ஸ்டாக்ஹோம்: மியன்மாரின் அரசாங்க ஆலோசகரான திருவாட்டி ஆங் சான் சூச்சியின் சில செயல்கள் வருத்தம் அளிப்பவையாக இருந்தாலும் அவருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட நோபெல் பரிசு மீட்டுக்கொள்ளப்படாது என்று நோபெல் ஃபவுண்டேஷன் தலைவர் லார்ஸ் ஹய்கென்ஸ்டென் தெரிவித்துள்ளார். அவருக்கு நோபெல் பரிசு வழங்கியதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் ஏற்படையவை அல்லாத காரணத்திற்காக அப்பரிசை மீட்டுக்கொள்வது என்பது சரியான செயல் அல்ல என்று அவர் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

மியன்மாரில் ரோஹிங்யா சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியதால் உலகச் சமூகத்திடமிருந்து திருவாட்டி சூச்சி கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். முன்னர் ராணுவ ஆட்சியின்கீழ் இருந்த மியன்மாரில் மக்களாட்சியை நிறுவ மேற்கொண்டிருந்த முயற்சிகளுக்காக 1991ஆம் ஆண்டில் திருவாட்டி சூச்சிக்கு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டிருந்தது. PHOTO: REUTERS