ஸ்டாக்ஹோம்: இயற்பியல், மருத்துவம், பொருளியல், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபெல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அவ்வகையில், இவ்வாண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபெல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று அறிவிக்கப்பட்டது.
இயற்பியல் துறை நிபுணர்களான அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் அஸ்கின், பிரான்சை சேர்ந்த ஜெரார்ட் மவ்ரோ, கனடாவைச் சேர்ந்த டோனோ ஸ்ட்ரிக்லேண்ட் ஆகியோருக்கு நோபெல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நீண்டகாலத்துக்குப் பிறகு இயற்பியலுக்காக நோபெல் பரிசு பெறும் மூன்றாவது பெண் விஞ்ஞானி என்ற பெருமையையும் டோனோ ஸ்ட்ரிக்லேண்ட் தட்டிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று வேதியியலுக்கான நோபெல் பரிசும், நாளை மறுதினம் அமைதிக்கான நோபெல் பரிசும், 8ஆம் தேதி பொருளியலுக்கான நோபெல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளன.

