லண்டன்: மலேசியாவின் முன் னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது அந்நாட்டின் தற்போதைய பிரதமர் மகாதீர் முகம்மது வருத்தம் தெரி வித்துள்ளார். அவரது தந்தையைப் போல திரு நஜிப் இல்லை என டாக்டர் மகாதீர் குறைகூறினார். கிராமத்துவாசிகளின் அவதி நிலையை நன்கு உணர்ந்து அவர்க ளுக்கு உதவிகளை ஆவனச் செய்தவர் திரு துன் அப்துல் ரசாக் ஹுசைன் என்று டாக்டர் மகாதீர் கூறினார். திரு ரசாக் பெருமளவில் நகர்ப்புற மேம்பாட்டி ற்கு வித்திட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார். ஆனால் அவ ருக்கு இருந்த பெருந்தன்மை அவரது மகன் நஜிப்புக்கு இல்லை என்றார் டாக்டர் மகாதீர். "பணம்தான் ராஜா" என்றும் திரு நஜிப் தம்மிடம் ஒரு முறை கூறியிருந்ததை அவர் சுட்டினார்.
"பணம்தான் ராஜா என்றால் அதைக் கொண்டு நாம் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று அர்த்தமாகும். நம்மிடம் பணம் இல்லையென்றால், அதைத் திருட நாம் முற்படுகிறோம்," என்று மலேசிய செய்தியாளர் களிடம் டாக்டர் மகாதீர் கூறினார். பிரிட்டனுக்கு பயணம் மேற் கொண்டு நாடு திரும்பும்போது அவர் இந்தக் கருத்தை முன்வைத் தார். திரு நஜிப் ஆட்சியில் இருந்த போது அரசு நிர்வாக முறைக்கு விளைவிக்கப்பட்ட பெருமளவி லான சேதம் குறித்த தமது வருத்தத்தையும் டாக்டர் மகாதீர் வெளிப்படுத்தினார். 1981ஆம் ஆண்டில் தாம் முதன்முறையாக பிரதமரானபோது அரசாங்க நிர்வாக முறையில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றார் அவர். PHOTO: AFP

