காணாமல்போன அனைவரும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்: ஜோக்கோ விடோடோ

காணாமல்போன அனைவரும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்: ஜோக்கோ விடோடோ

2 mins read
541caed4-62b0-46a8-beba-a00b24b92850
-

பாலு: கிழக்கு இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளிக் கிழமை ஏற்பட்ட மோசமான நில நடுக் கத்தைத் தொடர்ந்து காணா மல் போனவர்களைக் கண்டுபிடிக் கு மாறு கூடுதலான மீட்புப் பணியா ளர்களுக்கு இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ உத்தரவிட்டு உள்ளார். நேற்றைய நிலவரப்படி மாண் டோரின் எண்ணிக்கை 1,234ஆக உயர்ந்ததை அதிகாரிகள் உறுதிப் படுத்தினர். முன்னதாக அந்த எண்ணிக்கை 844ஆக இருந்தது. உயிரிழந்தவர்களில் பெரும்பா லானோர் சுலவேசி மாகாணத் தலைநகர் பாலுவைச் சேர்ந்த வர்கள். ஜகார்த்தாவிலிருந்து 1,500 கிலோ மீட்டர் தூரத்தில் வடகிழக்கே இந்நகர் அமைந்து உள்ளது.

மீட்புப் பணியாளர்கள் சென்று அடைவதற்கு சிரமமான பகுதிகள் சிலவற்றில் இடிபாடு களில் சிக்கி இன்னும் அதிக மானோர் உயிர் இழந்திருக்கக்கூடும் என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதி க ரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரிக்டர் அளவில் 7.4 என்று பதிவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏழு மீட்டர் உயரத்திற்கு பொங்கி எழுந்த சுனாமி பேர லைகள் அப்பகுதியில் பொருள் மற்றும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி ன. முக்கியச் சாலைகள் சேதமடைந் ததுடன் பாலங்கள் இடிந்து விழுந்த ன. மேலும், நிலச்சரிவுகளால் ஏராளமான வீடுகள் தரைமட்டமா கின.

"நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சில முக்கியப் பணிகள் உள்ளன. அவற்றில் முதலாவதாக, காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்," என்று அரசாங்க அதிகாரிகளிடம் திரு ஜோக்கோ கூறினார்.

மத்திய சுலவேசியில் பாலு நகருக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி வருகையளித்த இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, தரைமட்டமான இந்த வீட்டைப் பார்வையிட்டார். படம்: இபிஏ-இஎஃப்இ