தி ஹேக்: அணுவாயுத உடன் படிக்கையிலிருந்து ஈரான் சென்ற ஆண்டு விலகிய பிறகு அதன் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளின் ஒரு பகுதியைத் தளர்த்துமாறு அனைத்துலக நீதி மன்றம் அமெரிக்காவுக்கு உத்தர விட்டுள்ளது. உணவு, மருந்துகள் போன்ற மனிதநேய அடிப்படையிலான பொருட்களின் ஏற்றுமதியை அனுமதிக்க வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கையை அது ஆதரித்தது. அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு என்பதால் இது அனைத்துலக நீதிமன்றத்தின் எல்லைக்கு உட்பட்டதல்ல என்று அமெரிக்கா வாதாடியது.
அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் அதனைச் செய்யுமாறு வலியுறுத்த அந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. ஐநாவின் முக்கிய சட்ட அங்கமாக இருந்துவரும் அனைத் துலக நீதிமன்றம், உறுப்பு நாடு களுக்கு இடையேயான சட்டப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறது. ஆனால், அமெரிக்கா வும் ஈரானும் இதற்கு முன்பு இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

