ஒட்டாவா: மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு கனடா வழங்கிய கௌரவக் குடியுரிமையை அந்நாடு மீட்டுக் கொண்டுள்ளது. ரோஹிங்யா முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மியன்மார் ராணுவம் இழைத்த கொடுமைகளின் தொடர்பில் திருவாட்டி சூச்சி நடவடிக்கை ஏதும் எடுக்காததால் கனடா இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. தாம் வழங்கிய கௌரவக் குடியுரிமையை கனடா மீட்டுக் கொள்ளும் முதல் நபர் திருவாட்டி ஆங் சான் சூச்சி என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது சென்ற ஆண்டு மியன்மார் ராணு வம் நடத்திய தாக்குதல்களை 'இனப்படுகொலை' என கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திரு நெல்சன் மண்டேலா, திரு தலாய் லாமா, குமாரி மலாலா யூசஃப்ஸாய் உள்ளிட்ட ஐவருக்கு மட்டுமே கனடா இதுவரை கௌரவக் குடியுரிமை வழங்கி உள்ளது.

