இந்தோனீசியா நிலநடுக்கம், சுனாமி உதவிகள் தாமதத்தால் மக்கள் ஆத்திரம்

இந்தோனீசியா நிலநடுக்கம், சுனாமி உதவிகள் தாமதத்தால் மக்கள் ஆத்திரம்

1 mins read
7627ad7f-2eef-4c19-9fbf-1485efea38ba
-

ஜகார்த்தா: நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றால் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள இந்தோ னீசியாவின் பகுதிகளுக்கு உத விகள் சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுவதால் அந்தப் பகுதியில் மக்கள் ஆத்திரத்துக்குள்ளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேரிடரால் பாலுவில் பலி எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட் டுள்ளதால் அங்கு மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.

சென்ற வெள்ளிக்கிழமை நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமியால் ஏற்பட்ட நிலச்சரிவு, உடைந்த பாலங்கள் காரணமாக பாதிக்கப் பட்ட சில பகுதிகளைச் சேர்ந்தவர் களுக்கு உதவிகள் சென்றடைவ தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், மீட்புக் குழுக்கள் தங்களால் இயன்றவரை பணி களைத் தீவிரப்படுத்தியுள்ளன. சுமார் 1.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப் படுறது. இந்தோனீசியாவின் மத்திய சுலாவேசியில் கடந்த வெள்ளிக் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி, நிவாரணப் பணிகள் ஆகியன முன்னேற்றம் கண்டு வருவதாக இரண்டாவது முறையாக பாலு, கோங்கலா பகுதிகளைப் பார்வையிட்ட இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ நேற்று தெரிவித்தார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள தற்காலிக முகாம்களில் விநியோகிக்கப்பட்ட கோழிகளைப் பெற நெரிசல் ஏற்பட்டது. படம்: ஏஎஃப்பி