ரோஸ்மா மீது நீதிமன்றத்தில் 17 குற்றச்சாட்டுகள்; நவம்பர் 8ஆம் தேதி வழக்கு விசாரணை

ரோஸ்மா மீது நீதிமன்றத்தில் 17 குற்றச்சாட்டுகள்; நவம்பர் 8ஆம் தேதி வழக்கு விசாரணை

1 mins read

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது, வரி ஏய்ப்பு ஆகியவை தொடர்பில் முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர், 66, மீது நீதி மன்றத்தில் நேற்று மொத்தம் 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், அந்தக் குற்றச்சாட்டு களை ரோஸ்மா மறுத்துள்ளார். கள்ளப் பணத்தை நல்ல பண மாக்குதல் மூலம் 7 மி. ரிங்கிட் (S$2.3 மி.) பணத்தை அவர் பெற் றதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து, ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரைக் கைது செய்தனர். முன்னாள் பிரதமரின் மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பது மலேசிய வரலாற்றில் இதுவே முதன்முறை. கோலாலம்பூர் அமர்வு நீதி மன்றத்தில் நீதிபதி அஸுரா ஆல்வி முன்னிலையில் குற்றச் சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது ரோஸ்மா மிகவும் அமைதியாக, "நான் விசாரணை கோருகிறேன்," என்று சொன்னார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட் டால், அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபரா தமும் விதிக்கப்படலாம். ரோஸ்மாவுக்கான பிணைத் தொகை 2 மி. ரிங்கிட்டாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. அதில் 500,000 ரிங்கிட்டை நேற்றைக்குள் செலுத்தவேண்டும் என்றும் மீதித் தொகையை இம்மாதம் 11ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணை நவம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ரோஸ்மா தமது கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும் என்றும் பிணையில் வெளியில் இருக்கும் போது சாட்சிகளையோ அல்லது சாத்தியமுள்ள சாட்சிகளையோ சந்திக்கக்கூடாது என்றும் அறிவு றுத்தப்பட்டுள்ளார்.