நியூயார்க்: அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள புலோரன்ஸ் நகரில் துப்பாக்கிக் காரர் ஒருவர் ஏழு போலிஸ் அதி காரிகளை நோக்கிச் சுட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நேற்று முன்தினம் பிற்பகல் 4 மணிக்கு இந்தச் சம்பவம் நேர்ந்தது. தென் கரோலினாவில் வீடு ஒன்றில் அதிகாரிகள் தேடுதலை நடத்த முற்பட்டபோது, சந்தேக நபர் திடீரென அவர்களை நோக்கிச் சுட்டனர். வீட்டுக்குள் இருந்த துப்பாக்கிக்காரர் வெளியே சுட்டத்தில் முதலில் மூன்று பேர் காயமடைந்தனர். தொடர்ந்து அவர் சுட்டதில் மேலும் நால்வர் காயமடைந்தனர்.
துப்பாக்கித் தோட்டாக்களை எதிர்க்கக்கூடிய வாகனத்தின் மூலம், காயமடைந்த அதிகாரிகள் பாதுகாப்புக்குக் கொண்டு செல்லப் பட்டனர். சம்பவ இடத்திற்கு கிட் டத்தட்ட 100க்கும் அதிகமான அதிகாரிகள் சென்று உதவினர். இரண்டு மணி நேரத்திற்கு நீடித்த மோதலுக்குப் பிறகு, துப்பாக் கிக்காரர் கைது செய்யப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை. இந்த அதிகாரி தனக்கு தெரிந்த அதிகாரிகளில் ஆக தைரியம் மிக்கவர் என்று போலிஸ் படைப்பிரிவின் தலைவர் எல்லன் ஹெய்டர் தெரிவித்தார். காயம் அடைந்த ஆறு அதிகாரிகள் தற்போது உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலிஸ் துறையிலுள்ள அதி காரிகளின் பொதுநலம் உண்மை யானது என்று மாநில ஆளுநர் ஹென்ரி மெக்மாஸ்டர் தெரி வித்தார்.

