பெய்ஜிங்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிகழவிருந்த முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றின் ரத்துக்குச் சீனா காரணம் என்று அமெரிக்கா கூறியதை சீனா கண்டித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற இருந்த பாதுகாப்பு பேச்சுவார்த்தையின் ரத்து, வர்த் தகம் தொடர்பான பதற்றங்களின் கடுமையைக் காட்டுவதாக கவ னிப்பாளர்கள் கருதுகின்றனர். பாதுகாப்பு பேச்சுவார்த்தையின் ரத்திற்குச் சீனா காரணம் என்று கூறுவது உண்மையின் திரிபு என்றும் பொறுப்பற்றது என்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங் தெரி வித்தார்.
அமெரிக்க வெளியுறவு அமைச் சர் ஜிம் மெட்டிசுடனான சந்திப்பை சீனா ரத்து செய்ததாக கடந்த மாதம் அறிவித்தது. இம்மாதம் அந்தச் சந்திப்பு நடக்க வேண்டி இருந்தது. பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க அமெரிக்கா சில நாட்களுக்கு முன்னர் கேட்டி ருந்தது என்றும் உண்மை இதுதான் என்றும் திருவாட்டி ஹுவா தெரிவித்தார். ஒன்றுமில்லாததைப் பெரிதாக்கி வதந்திகளைப் பரப்பாமல் இருக்க இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமு-ம் கேட்டுக்கொள்வ தாகவும் அவர் கூறினார். இவ்விரு நாடுகளுக்கும் இடை யே நிலவும் வர்த்தக மோதல், மேலும் மோசமாகும் அபாயமுள்ள தாக கவனிப்பாளர்கள் கூறுகின் றனர். இதற்கு முன்னர், இத்தகைய ஒரு கலந்துரையாடல் கடைசியாக கடந்தாண்டு நடந்தது.

