கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னைய பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர்களுக்குச் சமர்ப்பிக் கப்பட்ட ஆவணங்கள், காகித பத்திரங்களாக இல்லாமல் ஒளி வட்டில் கொடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அவர்களுக்கும் அரசாங்க வழக்கறிஞர்களுக்கும் இடையே சுமார் 50 நிமிடங்களுக்கு நேற்று வாக்குவாதம் நடந்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி ஆவணங்களைச் சமர்ப்பிக்க அரசுதரப்பு வழக் கறிஞர்கள் முயன்றதாக இதன் தலைமை வழக்கறிஞர் சுலை மான் அப்துல்லா தெரிவித்தார்.
ஆயினும், ஒளிவட்டில் உள்ள ஆவணங்களைத் திறந்து பார்ப்பதில் பிரச்சினை இருப்ப தாகவும் பார்க்கக்கூடிய வகையில் அவற்றை வழங்குமாறும் திரு நஜிப்பின் தலைமை வழக்கறிஞர் டாக்டர் முகம்மது ஷஃபீ அப்துல்லா தெரிவித்தார். ஆகஸ்ட் 8ஆம் தேதி திரு நஜிப்பிற்கு ஒளிவட்டு ஒன்று கொடுக்கப்பட்டதாக திரு ஷஃபீ தெரிவித்தார். அக்டோபர் 3ஆம் தேதியில், மலேசியாவின் ஊழல் எதிர்ப்பு ஆணையத்திற்கு திரு நஜிப்பும் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் சென்றபோது அங்கிருந்த அதிகாரி ஒருவர் அவருக்கு மற்றோர் ஒளிவட்டை கொடுக்க முயன்றதையும் திரு ஷஃபீ சுட்டினார்.
முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்குடன் அவரது மனைவி ரோஸ்மா. படம்: த ஸ்டார்

