மலேசியா நீர்ச்சுழலில் மாணவர்களைக் காப்பாற்றச் சென்ற ஆறு அதிகாரிகள் மரணம்

1 mins read
fc5d8737-c8b7-49d2-96f4-fd0f4783dc85
-

செர்டாங்: மலேசியாவின் சிலாங் கூர் மாநிலத்திலுள்ள தாமான் புத்ரா பர்டானாவில் சுரங்கக் குளத்தில் விழுந்த இளையர் ஒருவரைக் காப்பாற்ற முயன்ற ஆறு மீட்புப் பணியாளர்கள் மாண்டனர். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மீட்புக்கான முக்குளிப்புப் படையைச் சேர்ந்த அந்த ஆறு பேர் நீர்ச்சுழலால் இழுத்துச் செல்லப் பட்டதாக தீயணைப்பு, மீட்புப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார். மாலை 5.50 மணிக்கு, குளத்தில் விழுந்ததாக நம்பப்படும் 17 வயது இளையரைத் தேடும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டி ருந்ததாக பேச்சாளர் கூறினார். இந்த இளையருடன் இரண்டு பேர் மீன் பிடிப்பதற்காக அந்த குளத்திற்குச் சென்றதாகத் தெரி யவந்தது.

அந்த ஆறு பேரின் உடல்கள் குளத்திலிருந்து எடுக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு இதய இயக்கமீட்பு சிகிச்சை செய்யப் பட்டது. ஆயினும் சிகிச்சை பல னில்லாமல் போனதாக பேச்சாளர் தெரிவித்தார். மாண்ட அதிகாரிகளில் இருவர் ஷா அலாம் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வேறு இருவர் போர்ட் கிள்ளான் தீயணைப்பு நிலை யத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.

சுரங்கக் குளத்தில் விழுந்து காணாமல் போன இளையரைத் தேடிக்கொண்டிருந்த ஆறு மீட்புப் பணியாளர்கள் நீழ்ச்சுழலில் இழுத்துச் செல்லப்பட்டனர். இவர்களது உடல்களை அதிகாரிகள் மீட்டனர். படம்: மலேசிய ஊடகம்