பலி எண்ணிக்கை 1,571; பலரைக் காணவில்லை

பலி எண்ணிக்கை 1,571; பலரைக் காணவில்லை

1 mins read

பாலு: இந்தோனீசியாவின் சுலாவேசி தீவில் ஏற்பட்ட மோச மான நிலநடுக்கத்தை அடுத்து, இடிபாடுகளில் சிக்கி யாரும் உயிருடன் இருந்தால் அவர்களை மீட்கும் பணி நேற்றும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த இயற் கைப் பேரிடரால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 1,500ஐயும் தாண்டியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் தரைமட்டமானதுடன், கார்கள் புரட்டிப்போடப்பட்டு பாலு நகரமே அலங்கோலமாகக் காட்சி அளிப்பதாகக் கூறப்பட்டது. சுமார் 200,000 பேர் உதவிக் காகக் காத்திருக்கும் பேரிடர்ப் பகுதிகளுக்குள் உதவிப் பொருட் கள் தாமதமாகச் சென்று சேர்ந்ததாகக் கூறப்பட்டது.

இதுவரை சுமார் 1,571 பேர் பலியானதாக இந்தோனீசியாவின் தேசிய பேரிடர் தடுப்பு அமைப்பின் பேச்சாளர் சுட்டோபோ புர்வோ நுக்ரோஹோ கூறினார். பலரோவா விலுள்ள பெரிய அரசாங்க வீட மைப்பு வளாகம் நிலநடுக்கத்தால் சிதைந்துபோனதை அடுத்து அந்த இடிபாடுகளில் பலர் சிக்கியிருக் கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதியில் மண் சகதிபோலான தாகக் கூறப்பட்டது. அந்தப் பகுதியில் ஆயிரத்துக் கும் அதிகமான வீடுகள் புதையுண் டதாகவும் அதனால் ஆயிரத்துக் கும் அதிகமானோரைப் பற்றிய தகவல் இல்லை எனவும் இந்தோ னீசியாவின் தேடி, மீட்கும் அமைப் பின் பேச்சாளர் யூசுஃப் லத்தீஃப் குறிப்பிட்டார்.