அமெரிக்காவின் குற்றச்சாட்டு அபத்தம்; சாடுகிறது சீனா

அமெரிக்காவின் குற்றச்சாட்டு அபத்தம்; சாடுகிறது சீனா

1 mins read

பெய்ஜிங்: அமெரிக்கத் தேர்தல் களில் சீனா தலையிடுவதாக அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டதை மறுத்துள்ள சீனா, அது அபத்த மானது என்று கூறியுள்ளது. தவறான போக்கை அமெரிக்கா உடனடியாக திருத்திக்கொள்வ துடன் ஆதாரங்கள் இன்றி சீனா வின் மீது குற்றஞ்சாட்டி, சீனா- அமெரிக்கா இடையிலான உறவு களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அது குறிப்பிட்டது. கடந்த வியாழக்கிழமை கூட்டம் ஒன்றில் உரையாற்றிய திரு மைக் பென்ஸ், சீனாவின் ராணுவம் உருவாக்கும் பதற்றம், வர்த்தகத் திருட்டு, மனித உரிமைகள் மீறல் ஆகியவற்றின் தொடர்பில் சீனா வைச் சாடியதோடு அமெரிக்கத் தேர்தலில் அது தலையிடுவதாகவும் சொன்னார்.

சீனா- அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் வலுத்திருக்கும் வேளையில் இதுபோன்ற குற்றச் சாட்டுகளை அமெரிக்கா தொடுத் துள்ளது. வெளிநாடுகளின் சொந்தப் பிரச்சினைகளில் தலையிடுவ தில்லை எனும் கொள்கையை சீனா கொண்டுள்ளது எனவும் அமெரிக்கத் தேர்தலில் தலையிட வில்லை எனவும் சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங் கூறியுள்ளார்.