ஓஸ்லோ: காங்கோ நாட்டைச் சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜ், ஈராக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நாடியா முராட் ஆகியோர் இந்த ஆண்டுக் கான நோபெல் பரிசைப் பெறுவர். அறுவை சிகிச்சையில் மிகச் சிறந்த வல்லுநராகவும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண் களுக்கு உதவுபவராகவும் திகழும் டெனிஸ் முக்வேஜ், 'அதிசய மருத்துவர்' என்று காங்கோ நாட்டு மக்களால் அழைக்கப்படுப வர். பெண்கள் மருத்துவரான 63 வயது டாக்டர் டெனிஸ், துன்புறுத் தல்களுக்கு உள்ளான பெண் களின் வலி தீர்க்க 20 ஆண்டுக ளுக்கும் மேலாகப் பாடுபட்டு வருகிறார். பாலியல் பாதிப்புக்குள் ளான பெண்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறார். ஈராக்கில் யாஸிடி இனத்தின் மீது கட்டவிழ்க்கப்பட்ட மோசமான தாக்குதலில் தப்பிப்பிழைத்தவர் இந்த ஆண்டின் நோபெல் பரிசைப் பகிர்ந்துகொள்ளும் 25 வயது நாடியா முராட்.
ஐஎஸ் பயங்கரவாதிகளால் கைது செய்யப்பட்டு, கும்பல் பாலியல் பலாத்காரம், சித்திரவதை, கட்டாயத் திருமணம், மதமாற்றம் என பல கொடுமைகளுக்கு ஆட் பட்ட நாடியா, அவர்கள் பிடியிலி ருந்து தப்பித்து பாதிக்கப்பட்ட யாஸிடி இன மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். போரில் சிறைபிடிக்கப்பட்ட 3,000 யாஸிடி களுக்காகப் போராடி வருகிறார். பரிசாக தங்கப் பதக்கம், சான் றிதழ், ரொக்கம் வழங்கப்படும்.
(இடமிருந்து) மருத்துவர் டெனிஸ் முக்வேஜ், மனித உரிமைகள் ஆர்வலர் நாடியா முராட் ஆகியோர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி ஓஸ்லோவில் பரிசு பெறுவார்கள். படம்: ராய்ட்டர்ஸ்

