சவூதி: வங்கித் தலைவராக பெண் நியமனம்

1 mins read

ரியாத்: சவூதி அரேபியாவின் வரலாற்றில் முதன்முறையாக வங்கி ஒன்றின் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போதுள்ள சவூதி பிரிட்டிஷ் வங்கி மற்றும் அலவ்வால் வங்கி ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப் பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ள புதிய வங்கியின் தலைவராக சவூதி அரேபியாவின் பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஒலயன் நியமிக்கப்பட்டுள்ளார். பழமைவாதத்தை காலம் காலமாக கடைப்பிடித்து வரும் சவூதி அரேபியா, பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிப்பது உட்பட கடந்த ஓராண்டாக சமூகத்தின் பல்வேறு நிலைகளிலும் பெண்களுக்கான உரிமைகளை வழங்கி வருகிறது.