வாக்குகளை அள்ள முயற்சி

வாக்குகளை அள்ள முயற்சி

1 mins read

போர்ட் டிக்சன்: போர்ட் டிக்சன் தொகு இடைத்தேர்தலில் போட்டி யிடவுள்ள அன்வார் இப்ராஹிமுக் காக தாம் பிரசாரம் செய்யப் போவதாக மலேசியப் பிரதமரும் பக்கத்தான் ஹரப்பான் கூட்ட ணியின் தலைவருமான மகாதீர் முகம்மது ஏற்கெனவே தெரி வித்திருந்தார். பிரசாரத்திற் கான இட மாக பாகான் பினாங் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இவ்வாண்டு மே மாதம் நடைபெ ற்ற பொதுத் தேர்தலில் பக்கத் தான் ஹரப்பான் கூட்டணி தோல்வியுற்ற இரு மாநிலத் தொகுதிகளில் ஒன்று பாகான் பினாங். எனவே, எதிர்வரும் இடைத் தேர்தலில் இத்தொகு தியில் பக்கத்தான் ஹரப்பான் வாக்கு களைத் தனது வசமாக்கிக் கொள்ள எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளில் ஒரு பகுதியாக டாக்டர் மகாதீரின் பிரசாரம் அமைகிறது