கென்யாவில் டிரம்ப் மனைவியை முட்டிய குட்டி யானை

கென்யாவில் டிரம்ப் மனைவியை முட்டிய குட்டி யானை

1 mins read
652bb94a-51e9-42b8-88aa-921bc045bbe1
-
Google News Preferred Icon

நைரோபி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் மனைவி மெலேனியா குழந்தைகள் நலத் திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற் காக ஆப்பிரிக்க நாடுகளுக்கு தனியாக சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளார். எகிப்து, கென்யா, மலாவி, கானா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, கென்யா சென்ற அவர், தலைநகர் நைரோபியில் உள்ள டேவிட் ஷெல்டிரிக் வனவிலங்குகள் சரணாலயத்திற்கு நேற்று முன் தினம் சென்றார். அங்கு குட்டி யானைகளுக்கு அவர் போத் தலில் இருந்து பாலை ஊட்டினார். திடீரென அவரை குட்டி யானை ஒன்று தனது துதிக் கையால் லேசாக முட்டியது. இதை எதிர்பார்க்காத மெலேனி யா, சற்றுத் தடுமாறி பின்னர் சுதாரித்துக் கொண்டார். நடந்த சம்பவத்தை வாய் மூடியபடி சிரித்து திறம்பட சமாளித்தார்.

நைரோபியில் உள்ள டேவிட் ஷெல்டிரிக் வனவிலங்குகள் சரணாலயத்திற்கு மெலேனியா வருகை அளித்தார். அப்போது இந்தக் குட்டி யானைக்கு போத்தலில் இருந்து பால் ஊட்டியபோது அது தனது துதிக்கையால் திடீரென அவரை லேசாக முட்டியது. படம்: ஏஎஃப்பி