பெய்ஜிங்: சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது மாயமான அனைத்துலக காவல்துறை அமைப் பான இண்டர்போலின் தலைவரைத் தேடி கண்டுபிடிக்கும் பணிகளைத் தான் முடுக்கிவிட்டு உள்ளதாக பிரான்ஸ் தெரிவித்து உள்ளது. பிரான்ஸ் நகரமான லியோனில் உள்ள இண்டர்போலின் தலைமை யகத்திலிருந்து கடந்த மாதம் 25ஆம் தேதி சீனாவுக்குச் சென்ற மெங் ஹோங்வெயிடமிருந்து அன்றிலிருந்து எந்தவிதத் தக வலும் கிடைக்கவில்லை என்று கவலை அடைந்துள்ள அவரது குடும்பத்தினர் கூறியிருப்பதா க அதிகாரிகள் தெரிவித்து உள் ளனர்.
இது குறித்து திரு மெங்கின் குடும்பத்தினர் அதிகாரி களிடம் புகார் அளித்துள்ளனர். "அவர் பிரான்சில் காணாமல் போகவில்லை" என்று இது குறித்த விசாரணையில் ஈடுபட்டு உள்ளவர்களுடன் தொடர்புடைய ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவ னத்திடம் கூறியுள்ளார். சீனாவை சேர்ந்தவரான 64 வயது திரு மெங், தமது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் லியோன் நகரில் வசித்து வந்து உள்ளார்.

