பாலு: இந்தோனீசியாவின் சுலா வேசி தீவில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தையும் சுனாமியையும் தொடர்ந்து காணாமல்போன ஆயிரக்கணக்கானோரை அவசர மாக தேடிவரும் மீட்புப் பணியா ளர்கள் பொதுச் சுகாதார எச்சரிக் கையை விடுத்துள்ளனர். சுலாவேசி தீவின் பாலு நகரில் இன்னும் ஏராளமான சடலங்கள் அழுகிப்போன நிலையில் மீட்கப்ப ட்டுள்ளன. இதற்கிடையே, நேற்றை ய நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,649ஐ எட்டிவிட்ட தாக தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்த னர். பேரிடர் நிகழ்ந்து ஒன்பது நாட்கள் ஆகியுள்ள நிலையில், காணாமல் போனவர்களை உயிருடன் மீட்பதற்கான சாத்தியம் குறைந்துவிட்டது.
இருப்பினும், இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களைத் தேடி மீட்பதற் கான பணிகளை நிறுத்திக்கொள்ள இந்தோனீசிய அதிகாரிகள் அதி காரபூர்வமாக அறிவிக்கவில்லை. நிலநடுக்கத்தால் மிக மோச மாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளான பலரோவா மற்றும் பெட்டோபோவில் ஏராளமான சடலங்கள் அழுகிப் போன நிலையில் இடிபாடுகளில் புதைக்கப்பட்டிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சிதைந்துபோன நிலையில் இன்னும் பல சடலங்கள் கண்டறியப்படக்கூடும் என்பதால் பாதிக்க ப்பட்ட பகுதிகளைவிட்டு தள்ளி இருக்குமாறு பொதுமக் களை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
" க ண் டு பி டி க் க ப் ப ட் டு ள் ள பெரும் பாலான சடலங்கள் முழுமை யானதாக இல்லை. மீட்புப் பணியா ளர்களுக்கு இது ஆபத்தை விளைவிக்கிறது. நோய்த்தொற்று பரவுவதைத் தவிர்க்க நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது," என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் இந்தோ னீசியாவின் தேடுதல், மீட்புப் பணிக் குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
பாலுவில் உள்ள மெர்கியூர் ஹோட்டல் இடிபாடுகளில் சிக்கி இருப்போரைத் தேடிய பிறகு அந்த ஹோட்டலைவிட்டு வெளியேறும் பிரெஞ்சு மீட்புப் பணியாளர்கள். படம்: இபிஏ

