பாலியல் களங்கம்: வெற்றியைக் கொண்டாடாத ரொனால்டோ

பாலியல் களங்கம்: வெற்றியைக் கொண்டாடாத ரொனால்டோ

1 mins read

உடினே (இத்தாலி): கிறிஸ்டியானோ ரொனால்டோ புகுத்திய கோல் பாலியல் புகாரால் அவர் பாதிப் படையவில்லை என்பதை உணர்த்தி உள்ளது. இத்தாலிய காற்பந்து லீக் போட்டியில் ஜுவென்டஸ் 2=-0 என்ற கோல் கணக்கில் உடினேசேவை விழ்த்தி யதில் ரொனால்டோ பெரிதாகப் புகழப்படுகிறார். 'கிறிஸ்டியானோ, கிறிஸ்டியானோ' என்று ரசிகர்கள் முழக்கமிட்டு கொண்டாடியபோதி லும் அதனை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தமது பெருவிரலை உயர்த்திக் காட்டினாரே தவிர ரொனால்டோ வின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. அவர் மீது சுமத்தப்பட்டு உள்ள பாலியல் புகார் அவரது காற்பந்துப் பயணத்துக்குப் பெரும் முட்டுக் கட்டையாக அமைய உள்ளது. அமெரிக்க போலிசார் அந்தப் புகாரை விசாரிக்கத் தொடங்கி உள்ளனர்.