அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியானார்

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியானார்

1 mins read
661c3aa5-dab2-4ca7-8e9e-38ec7e26c9d8
-

கவனா; எதிர்ப்பாளர்கள் போராட்டம் வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பினால் முன் மொழியப்பட்ட பிரெட் கவனா, பலத்த எதிர்ப்புகளுக்கிடையே, அவரது குடும்பத்தினர் புடைசூழ, அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்விலிருந்து வெளி யேறும் நீதிபதி ஆன்டனி கென்னடியின் முன்னிலையில் கவனா உறுதிமொழி எடுத்துக் கொண்டார். வா‌ஷிங்டனிலுள்ள உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த பலநூறு ஆர்ப்பாட்டக் காரர்கள் நீதிமன்றத்தின் வெண் கலக் கதவைப் பலமாகத் தட்டித் தங்களது எதிர்ப்பைத் தெரிவித் தனர். நீதிபதி கவனா தம்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச் சாட்டுகளை மறுத்துள்ளார். அவரது நியமனம் குறித்து அமெரிக்க செனட் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 50 பேர் கவனாவுக்கு ஆதரவாகவும் 48 பேர் எதிராகவும் வாக்களித் தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான ஜெஸ்ஸிகா கேம்ப்பெல் ஸ்வான்சன், 35, நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித் தேவதை சிலையின் மீது அமர்ந்து கையை உயர்த்தி கவனாவின் பதவி ஏற்புக்குத் தம் எதிர்ப்பைத் தெரிவித்தார். படம்: ராய்ட்டர்ஸ்