டிரம்ப்-கிம் இடையே இரண்டாம் சந்திப்பு, அணுவாயுதக் களைவு

டிரம்ப்-கிம் இடையே இரண்டாம் சந்திப்பு, அணுவாயுதக் களைவு

2 mins read

சோல்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான இரண் டாவது சந்திப்பு, அணுவாயுதக் களைவு ஆகிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நிகழ்த்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ நேற்று பியோங்யாங்கிற்குப் பயணம் மேற்கொண்டார். தோக்கியோவிலிருந்து கிளம் பிய திரு போம்பியோ, தோக்கியோ உள்பட பியோங்யாங், தென் கொரியா, சீனா ஆகிய நாடு களுக்குப் பயணம் மேற்கொண்டு உள்ளார். அதிபர் டிரம்ப்பும் தலைவர் கிம்மும் சிங்கப்பூரில் ஜூன் மாதம் நிகழ்த்திய முதல் சந்திப்பின்போது செய்துகொண்ட உடன்படிக்கை களை நிறைவேற்றுவது குறித்து முன்னேற்றம் தெரிவதாகவும் தம்மையும் தம் குழுவையும் உபசரித்ததற்கு நன்றி தெரிவித்தும் திரு போம்பியோ தலைவர் கிம்முடன் நிகழ்ந்த சந்திப்பு பற்றி தம் டுவிட்டரில் தெரிவித்தார். ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க-=வடகொரிய ஒப்பந்தம் உருவெடுக்கும் வேளையில், திரு போம்பியோ நான்காவது முறையாக பியோங்யாங்கிற்குச் சென்றார். வா‌ஷிங்டனுக்கும் பியோங் யாங்கிற்கும் இடையே போதுமான நம்பிக்கையை வளர்ப்பதே தம் இலக்கு என்றார் திரு போம்பியோ.

இது அமைதியை நோக்கிச் செல்ல உதவும் என்றும் கூறிய திரு போம்பியோ, அடுத்த உச்ச நிலை சந்திப்புக்கான ஏற்பாடுகளை யும் தீர்மானிக்கப் போவது குறித் தும் தலைவர் கிம்மிடம் பேசினார். இருப்பினும் இது குறித்துப் பெரும் எதிர்பார்ப்புகள் வேண்டாம் என்றும் இரு நாட்டுத் தலைவர் களுக்கும் இடையே சந்திப்பு நிகழ்வதற்கான இடம், நாள் போன்ற விவரங்களை முடிவு செய்வதற்கான சாத்தியத்தை முதலில் பார்ப்பதாகவும் அவர் கூறினார்.