பேராக் கார் விபத்தில் கருகி மாண்ட குடும்பம்

பேராக் கார் விபத்தில் கருகி மாண்ட குடும்பம்

1 mins read
8f56a9fd-8cf4-4ad5-997b-677603b25571
-
Google News Preferred Icon

ஈப்போ: கனரக வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் பேராக் மாநிலத்தின் வடக்கு-=தெற்கு விரைவுச்சாலை யில் நேற்று முன்தினம் விபத்துக் குள்ளானதில், ஒரு குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியாகினர். இரும்புத் தாதுக்களைச் சுமந்து சென்ற கனரக வாகனத் தைச் செலுத்திய 41 வயது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந் ததில் அவ்வாகனம் பல வாகனங் களை உரசிச் சென்றபின் ஒரு காரை விரைவுச்சாலையின் வலது தடம்வரை இழுத்துச் சென்றதாகவும் நம்பப்படுகிறது.

இதனால் வலதுபுறம் இருந்த கனரக வாகனத்திற்கும் இடப் பக்கம் இருந்த ஒரு கான்கிரீட் தடுப்புக்கும் இடையே அந்தக் கார் சிக்கிக்கொண்டதாக அறி யப்படுகிறது. பின்னர் அந்தக் கார் தீப்பற்றி எரிந்ததாகவும் மோதலின் தாக் கத்தால் காரில் இருந்தவர்கள் தங்கள் இருக்கைகளிலிருந்து வெளியேற முடியாமல் போன தாகவும் கூறப்படுகிறது.

பேராக் விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ஐவர் தீக்கு இரையாகினர். படம்: மலேசிய ஊடகம்