அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவின் சீனப் பயணம் எடுத்த எடுப்பிலேயே இரு தரப்புக்கும் இடையில் பிணக்கத் திற்கான அறிகுறியாக இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வரும் சூழ லில் அச்சந்திப்பு இடம்பெற்றது. அமெரிக்க அமைச்சர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை நேற்று பெய்ஜிங்கில் சந்தித்தார். இருவரும் பிறகு கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அண்மையில் சீனாவுடன் வர்த்தகம் தொடர்பில் அமெரிக்கா இடைவிடாமல் பிரச்சினைகளைக் கிளப்பிவருவதாகவும் தைவான் விவகாரம் தொடர்பில் தொடர்ச்சி யான பல நடவடிக்கைகளை அது கைக்கொண்டு இருப்பதாகவும் சீன அமைச்சர் தெரிவித்தார். தைவான் தொடர்பான அமெரிக் காவின் செயல்கள் எல்லாம் சீனாவின் உரிமைகளைப் பாதிப்பதாக இருக்கின்றன என்று கூறிய திரு வாங், சீனாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கை களை, ஆதாரம் எதுவும் இன்றி அமெரிக்கா குறைகூறி வருகிறது என்றும் குறிப்பிட்டார். அமெரிக்கா இப்படி நடந்து கொள்வது இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட பரஸ்பர நம்பிக்கை மீதான நேரடி தாக்குதல் என்று சீனா நம்புவதாகவும் அந்த நாட்டு அமைச்சர் தெரிவித்தார்.
இதனால் சீன-அமெரிக்க உறவில் சந்தேக மேகம் படர்ந்து வருவதாகவும் தெரிவித்த திரு வாங், இத்தகைய தவறான காரி யங்களை எல்லாம் அமெரிக்கா நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சீனாவுக்கு செல்வதற்கு முன் பாக திரு பொம்பியோ, வட கொரியா சென்று அங்கு அந்த நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன்னைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு பற்றி சீன அமைச்சருக்கு திரு பொம்பியோ எடுத்துக்கூறி விளக்கினார். பிறகு நடந்த கூட்டுச் செய்தி யாளர்கள் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அமைச்சர், சீனா எடுத் திருக்கும் நடவடிக்கைகள் தங்க ளுக்குப் பெரிய அளவில் கவலை தருவதாகக் குறிப்பிட்டார்.

