பேங்காக்கில் துப்பாக்கிச்சூடு; இந்தியர் உட்பட இருவர் மரணம்

பேங்காக்கில் துப்பாக்கிச்சூடு; இந்தியர் உட்பட இருவர் மரணம்

2 mins read
acdb257f-f230-42ab-b1bd-eeb67bdfe517
-

தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கில் குண்டர் கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 42 வயது இந்தியர் உட்பட சுற்றுப்பயணிகள் இருவர் கொல்லப்பட்டனர். சம்பவத்தில் மேலும் ஐவர் காயம் அடைந்தனர். அவர்களில் இந்தியர்கள் இருவர் என்று ஊடகங்கள் தெரிவித்தன. அந்தப் பயங்கர அடிதடி சம்பவம், பேங்காக்கில் ரட்சதேவி மாவட்டத்தில் உள்ள சென்ட்ரா வாட்டர்கேட் பெவிலியன் ஹோட்டலுக்கு பின்புறத்தில் இருக்கும் ஒரு தெருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் நிகழ்ந்ததாக பேங்காக் போஸ்ட் செய்தித் தாள் தெரிவித்துள்ளது.

அந்தச் சம்பவத்தில் காயமடைந்த காக்ரஜர் தீரஜ் என்ற இந்திய சுற்றுப் பயணியும் லாவோஸ் நாட்டைச் சேர்ந்த தொனக்யோ, 28, என்ற பயணியும் மருத்துவமனையில் மாண்டனர். காயமடைந்தவர்களில் இருவர் இந்தி யர்கள், இருவர் தாய்லாந்து நாட்டினர், ஒருவர் லாவோசைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது. அனைவரும் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட இந்தியர்கள் அந்தக் கடைத்தொகுதியில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு பேருந்துக்காக காத்திருந்தபோது அங்கு திரண்ட இரண்டு இளையர் கும்பல்கள் திடீரென்று அடித்துக்கொண்டன.

இதனிடையே, அந்தக் கடைத்தொகுதி யில் சுற்றுலா வழிகாட்டியாக வேலை பார்த்துவரும் ஜூலி சாவாங், 62, என்பவர் அந்தச் சம்பவம் பற்றி விவரித்தார். காயமடைந்த இந்தியர்கள், இந்தியா விலிருந்து வந்த சுற்றுப் பயணிகள் என்றும் அந்தக் கடைத்தொகுதியின் அடித்தளத்தில் இருக்கும் இந்திய உணவகத்திற்கு ஒரு பேருந்தில் அவர்கள் சாப்பிட வந்ததாகவும் சாவாங் கூறினார். சாப்பிட்டு முடித்ததும் அந்த இந்தியர் கள், கடைகளில் விரும்பிய பொருட்களை வாங்க சிறிது நேரம் கொடுக்கப்பட்டது. கடைத்தொகுதியில் பொருட்களை வாங்கிக்கொண்டு பேருந்தில் ஏறுவதற்காக ஒரு கார் பேட்டைக்கு வந்தபோது அந்தச் சுற்றுப்பயணிகள் குண்டர் கும்பல் தாக்கு தலுக்கு இலக்காகிவிட்டனர் என்றாரவர்.

பேங்காக்கில் சென்ட்ரா வாட்டர்கேட் பெவிலியன் ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள இந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8.30 மணிக்கு குண்டர் கும்பல்கள் மோதிக்கொண்டன. இந்தப் பகுதியில்தான் சுற்றுப்பயணிகளின் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. படம்: தி நேஷன்/ஏ‌ஷியா நியூஸ் நெட்வொர்க்