மலேசிய முன்னாள் துணைப் பிரதமரிடம் விசாரணை

மலேசிய முன்னாள் துணைப் பிரதமரிடம் விசாரணை

1 mins read
16ec8e33-78c4-4d1f-a608-a9b7bf8f8b5e
-

புத்ராஜெயா: மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஸாஹிட் ஹமிடியிடம் விசாரணைக்கு முன்னிலை யாகும்படி மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இம்மாதம் 10ஆம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு புத்ரஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத் துக்கு வர வேண்டும் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள் ளது. முன்னாள் துணைப் பிரதம ரான ஸாஹிட் ஹமிடி முன்னாள் ஆளும் கட்சியும் தற்போதைய எதிர்க்கட்சியுமான அம் னோவுக்குத் தலைவராக உள் ளார்.

ஆனால் ஸாஹிட் விசாரிக் கப்படுவதை ஆணையம் உறுதி செய்யவில்லை. இருப்பினும் அவரிடம் அழைப்பு கடிதம் ஒப் படைக்கப்பட்டதாக அம்னோ அதிகாரிகள் சிலர் தெரிவித் தனர். திரு அஹமட் ஸாஹிட் விசாரணைக்கு அழைக்கப்படு வது இது, 3வது முறை. கடந்த ஜூலை 2, 3 தேதிகளில் அவரது அற நிறுவனத்தின் நிதியை பயன் படுத்தியதாகக் கூறப்படுவதை குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். தனது மனைவி, தன்னுடைய பட்டதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. அதன் மொத்த மதிப்பு 800,000 ரிங்கிட் (S$267,000).

முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஹமிடி ஸாஹிட் 3வது முறையாக விசாரிக்கப்படுகிறார். கோப்புப் படம்: இபிஏ