இரு அமெரிக்கர்களுக்கு பொருளியல் தொடர்பான பணிக்கு நோபெல் பரிசு

இரு அமெரிக்கர்களுக்கு பொருளியல் தொடர்பான பணிக்கு நோபெல் பரிசு

1 mins read
38bc4e2b-acd2-456d-ba6a-7fb44fb708e8
-
Google News Preferred Icon

இவ்வாண்டின் பொருளியல் வளர்ச்சிக்கான நோபெல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் பகிர்ந்துகொள்கின்றனர். பொருளியல் வளர்ச்சியில் புத்தாக்கத்தையும் பருவநிலை யையும் ஒருங்கிணைத்ததற்காக அவர்கள் இருவருக்கும் நோபெல் வழங்கப் படுவதாக தேர்வுக் குழு தெரிவித் தது. யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரான நோர்டாஸ், முன்னாள் உலக வங்கியின் பொருளியல் தலைவரும் தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ரோமெர் ஆகிய இருவரும் நீண்ட, தாக்குப்பிடிக்கக் கூடிய பொருளியல் வளர்ச்சியை உருவாக்குவதற்கான அடிப் படையான விவகாரத்துக்கு பதிலளித்துள்ளனர் என்று அறிக்கையில் சுவீடன் அறிவியல் கல்வி கழகம் தெரிவித்தது. பேராசிரியர் நோர்டாஸ், 77, பொருளியல் பகுப்பாய்வில் பருவநிலை மாற்றத்தை ஒருங் கிணைத்திருந்தார். திரு ரோமெர், 62, பொருளியல் பகுப்பாய்வுக்குப் புத்தாக்கமான தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தியிருந்தார்.

வில்லியம் நோர்டாசுக்கும் பால் ரோமருக்கும் நோபெல் பரிசு வழங்கப்படும் என்று தேர்வுக் குழு அறிவிக்கிறது. படம்: ஏஎஃப்பி