கோலாலம்பூர்: மலேசியாவின் முன் னாள் பிரதமர் நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சூர் நேற்று இரண்டு மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகையில் ஒரு மில்லியன் ரிங்கிட்டை செலுத்தினார். கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், வருமான விவரங்களை வருமான வரித்துறையிடம் தெரிவிக்க தவறியது உட்பட மொத்தம் 17 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார். கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள பிணைத்தொகை கட்டும் இடத்துக்கு காலை 10.15 மணியளவில் திருமதி ரோஸ்மா வந்தார். அப்போது அவருக்கு உத்தரவாதம் வழங்கியதாக நம்பப்படும் இரு பெண்கள் உடன் இருந்தனர். சில பத்திரங்களில் கையெழுத்திட்ட பிறகு அவர்கள் அனைவரும் 11.15 மணியளவில் வெளியே வந்தனர்.
இம்மாதம் 3ஆம் தேதி அவர் மீது குற்றம்சாட்டப்பட்டபோது இருவர் உத்தரவாதத்ததுடன் இரண்டு மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் தம் மீது சுமத்தப்பட்ட 17 குற்றச்சாட்டுகளையும் ரோஸ்மா மறுத்துள்ளார். அதே நாளில் 500,000 ரிங்கிட் கட்ட வேண்டும் என்றும் எஞ்சிய தொகையை அக்டோபர் 11ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

