சீனாவில் ஒரு வார விடுமுறையில் உள்நாட்டு சுற்றுலா வருமானம் $119 பில்லியனைத் தொட்டது

1 mins read
7cd5bb0c-89cd-4610-82ea-35366808083f
-

பெய்ஜிங்: சீனாவில் தேசிய நாளை முன்னிட்டு நீண்ட ஒரு வார விடுமுறையில் உள்நாட்டு சுற்று லாத் துறையின் வருமானம் 119 பில்லியன் டாலரைத் தொட்டது என்று அந்நாட்டின் கலாசார, சுற்று லாத் துறை அமைச்சு தெரிவித்தது. ஆண்டுக்கு ஆண்டு அடிப் படையில் சுற்றுலா வருமானம் 9.04 விழுக்காடு கூடியது என்று அறிக்கையில் அமைச்சு சொல் லிற்று. விடுமுறை நாட்களில் உள் நாட்டில் உள்ள பூங்கா, இயற்கை சார்ந்த இடங்கள், அருங் காட்சியகம், இசை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு சீன பயணிகள் 726 மில்லியன் முறை சென்றுள்ளனர்.