சிங்கப்பூர்: பருவநிலை மாற்றங் களால் பேராபத்து ஏற்படவிருக் கிறது. ஆனால் இதனை தடுத்து நிறுத்துவதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் அவகாசம் இருப்பதாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்தது. பூமியின் மேற்பரப்பு 1.5 டிகிரி செண்டிகிரேட் வெப்பமடைந்தால் ஏற்படும் விளைவுகளையும் இதனை தடுத்து நிறுத்த சமூகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பல நாடுகளை உள் ளடக்கிய ஐநா பருவநிலை குழு ஆராய்ந்தது.
இதற்காக கடந்த வாரம் தென்கொரியாவின் தலைநகரான சோலில் 195 நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள், அதிகாரிகள் ஒன்று கூடினர். இதில் பருவநிலை மாற்றம் தவிர்க்க முடியாது என்று தெரிவித்தனர். "உலகம் வெப்பமடைவதை 1.5 டிகிரி செண்டிகிரேட்டுக்குக் குறைக்க ஏற்கெனவே பல நட வடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றை துரிதப்படுத்தியாக வேண்டும்," என்று அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் வேலரி மேசன் டெல்மோட்டே குறிப்பிட்டார். உலகம் வெப்பமடைவதால் வாழும் உயிரினங்களுக்கு பூமி பேராபத்தாக அமைந்துவிடும் என்று அறிவியல் அறிஞர்கள் பல ஆண்டுகளாக எச்சரித்து வந்துள் ளனர். "பூமியில் மிகவும் ஆபத்தான புயல்கள், தொடர்ந்த மழை, வெள்ளம், வறட்சி ஏற்பட புவியின் மேற்பரப்பு வெப்ப நிலை கூடுதலாக 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் போதுமானது," என்று அறிக்கை குறிப்பிட்டது.
பருவநிலை மாற்றங்களால் வறண்ட நிலையில் காட்சிதரும் பொலிவியாவின் பூப்பூ ஏரி. படம்: ராய்ட்டர்ஸ்

