இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் கைது

1 mins read

கொழும்பு: இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமை யிலான அமைச்சரவையில் குழந் தை கள் நலத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர், விஜயகலா மகேஸ்வரன்(45). தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இவர், கடந்த ஜூன் மாதம் யாழ்ப் பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் பங்கேற்று உரையாற்றினார். தனது உரையின் இடையே, தமிழர்கள் அதிகமாக வாழும் நாட்டின் வடக்கு மாகாணத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு வருவதாக சுட்டிக்காட்டிய விஜய கலா மகேஸ்வரன், முன்னர் அரசு நிர்வாகத்துக்கு இணையாக விடு தலைப் புலிகள் இப்பகுதியை ஆட்சி செய்தபோது மக்கள் பாது காப்பாக இருந்ததாக குறிப்பிட் டார். அவரது இந்தக் கருத்துக்கு இலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

கடந்த ஜூலை மாதம் இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து ராஜபக்சே உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். விஜயகலா மகேஸ் வரனை அமைச்சர் பதவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி யில் இருந்து நீக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்த லாகப் பேசிய அவரை விசார ணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து விஜயகலா மகேஸ் வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலை யில், தனக்கு எதிரான குற்றச் சாட்டு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக கொழும்பு நகரில் உள்ள திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்புக் காவல்துறை அலுவல கத்தில் நேற்று விஜயகலா முன்னி லையானார். அப்போது அவரை காவல்துறையினர் கைது செய் தனர்.