போர்ட் டிக்சன்: எதிரியைச் சந்தித்த அன்வார்

போர்ட் டிக்சன்: எதிரியைச் சந்தித்த அன்வார்

1 mins read
6d9443e4-e76f-496c-9745-70f6109d5ade
-

போர்ட் டிக்சன்: அக்டோபர் 13ஆம் தேதி நடைபெறும் போர்ட் டிக்சன் இடைத்தேர்தலில் கெஅடிலான் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அன்வார் இப்ராகிமை எதிர்த்து ஆறு பேர் போட்டியிடுகின்றனர். அடுத்த பிரதமராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அன்வார் இப்ராகிமின் முன்னாள் உதவியாள ரான முஹமட் சைஃபூல் புகாரி அஸ்லானும் இதில் ஒருவர். சுயேச்சை வேட்பாளராக சைஃபூல் போட்டியிடுகிறார். திரு அன்வார் இப்ராகிம் மீது ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டை சுமத்தி அவர் சிறையில் தள்ளப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் இந்த சைஃபூல் என்பது குறிப்பிடத் தக்கது.

வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பிறகு தனது இருக்கைக்குச் சென்ற அன்வார் இப்ராகிமை அப்போது அங்கிருந்த சைஃபூல் கைகுலுக்கி வரவேற்றார். இந்தத் தர்மசங்கடமான சந்திப் பில் இருவரும் தங்களை இயல் பாகக் காட்டிக்கொண்டனர். இதன் பிறகு சைஃபூலும் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். திரு அன்வார் இப்ராஹிம் இன்று வரை தம் மீதான ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். இந்தக் குற்றச்சாட்டு தம்மை அரசியலிலிருந்து ஒழித்துக்கட்டுவதற்காக மேற் கொள்ளப்பட்ட அரசியல் சதி என்றும் அவர் கூறியுள்ளார். பொதுத் தேர்தலுக்குப் பிறகு மே 16ஆம் தேதி அன்று பேரரசர் ஐந்தாம் முகமது அன்வாருக்கு முழு மன்னிப்பு வழங்கியதால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.